80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமா முழுவதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ராதிகா. தற்போதும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாராட்டு பெற்றும் வரும் ராதிகா, சின்னத்திரையிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர்.
சினிமா ரேஞ்சிக்கு மெக தொடர்களை உயர்த்தியவர்களில் ராதிகாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், இவர் தயாரித்து நடித்த மெகா தொடர்கள் அத்தனையும் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவைகள்.
தற்போது ராதிகா, நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதிகாச மெகா தொடர் சந்திரகுமார். மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமான முறையில் இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திடீரென்று ‘சந்திரகுமாரி’ தொடரில் இருந்து ராதிகா விலகியிருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இனி ராதிகாவுக்கு பதில், அந்த தொடரில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க இருக்கிறார்.
இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள நடிகை ராதிகா, நடிகை விஜி சந்திரசேகருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Welcome to the talented @ActorViji with a warm hug and loads of love to #chandrakumari who will bring a fabulous twist to the story. Give her the love you have showed me and welcome her❤️❤️keep watching 👍🏻at 6.30pm🙏🏻🙏🏻
— Radikaa Sarathkumar (@realradikaa) April 1, 2019
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...