சிவம் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் தயாரிக்கும் படம் ‘சண்டிமுனி’. நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்காளை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயண், ஷபி பாபு, விஜய் பூபதி, நரேஷ், ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி, மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மில்கா செல்வகுமார் இயக்கும் இப்படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும், சிலையும் அமைக்கப்பட்டது. இதில், 30 அடி உயர் அசிலை அமைக்கப்பட்டு அதன் முன் மனீஷா யாதவ் பக்தி பரவசத்தோடு, ”பெரும் கோபக்காரா எங்க சண்டி வீரா தொல்லை தீர்க்க வாடா....ஆவி ஓட்ட வாடா...” என்று பாடி ஆடிய பாடல் படமாக்கப்பட்டது.
40 நடன கலைஞர்கள், 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட பாடல் காட்சிக்கு அசோக்ராஜா நடனம் அமைத்தார். இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும், ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
இப்படால் குறித்து இயக்குநர் கூறுகையில், “இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் - மணீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெய்வ வழி பாட்டு காட்சி தான் இது.” என்றவர், யோகி பாபு காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார், என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.
பழனி, கொடைக்கானல், நெய்க்காரன்பட்டி, பொள்ளாசி, வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஏ.கே.ரிஷால் சாய் இசையமைக்கிறார். வ.கருப்பன் பாடல்கள் எழுத, ராதிகா, லாரன்ஸ் சிவா நடனம் அமைத்திருக்கிறார்கள். சி.முத்துவேல் கலையை நிர்மாணிக்க, சூப்பர் சுப்பராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...