சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ’முனி 4 காஞ்சனா 3’.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயின்களாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி ஆகியோர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டூபாடு இசையமைக்க, எஸ்.தமன் பின்னணி இசையமைத்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார். ஆர்.ஜனார்த்தனன் கலையை நிர்மாணிக்க, சூப்பர் சுப்பராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ராகவா லாரன்ஸ் நடனம் அமைத்திருக்கிறார். விவேகா, மதன் கார்க்கி, சரவெடி சரவணன் ஆகியோர் பாடல்கள் எழுத தயாரிப்பு மேற்பார்வையை விமல்.ஜி கவனித்துள்ளார்.
இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது.பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.
இந்த கோடையை கொண்டாட குடும்ப படமாக முனி 4 காஞ்சனா 3 இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...