தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்த மகேந்திரனை, ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியது விஜயின் ‘தெறி’ படம் தான். இயக்குநர் அட்லீயின் அன்பு வேண்டுகோளை ஏற்று அப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் மாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
‘தெறி’ படப்பிடிப்பின் போது விஜயை மகேந்திரன் நாற்காலி ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு அவரிடம் வசனம் பேசுவது போலவும், அப்போது விஜய் அந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
விஜயை கட்டிப்போட வைத்திருந்த நாற்காலியில் ஏகப்பட்ட ஆணிகள் அடித்திருந்ததை பார்த்த இயக்குநர் மகேந்திரன், “விஜய் ஆணியுடன் மட்டும் விளையாடாதீங்க, ஒரு ஆணி குத்தினால், அது செப்டிக்காகி பல துன்பங்களையும் கொடுக்கும்” என்று செல்லமாக கண்டித்ததாக, முன்னணி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதேபோல், விஜையும் மகேந்திரனிடம் வந்து இந்த இடம் உங்களுக்கானதாக இல்லை, என்று தானே நினைக்கிறீர்கள், என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
‘தெறி’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மகேந்திரன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...