சினிமாவின் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக பலர் குற்றம் சாட்டி வருவதோடு, இத்தகை செயல் சினிமாவில் மட்டும் அல்ல பல துறைகளிலும் இருப்பதாக நடிகைகள் பலர் தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், சினிமாவில் இத்தகைய வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மை தான், என்று சீனியர் மற்றும் ஜூனியர் நடிகைகள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் இளம் பெண்ணுக்கு ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி, அவரை பல முறை கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என 19 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, 2016 ஆம் ஆண்டு அவருக்கு பட வாய்ப்பும் கொடுத்திருக்கிறார். பிறகு போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசியவர், அவரிடம் பழகி தன் வீட்டுக்கு அழைத்து, ஆடிசன் செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த தயாரிப்பாளர் அந்த பெண்ணை தனது செக்ஸ் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும், அப்பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த அந்த நபர், அதைக் காட்டி மிரட்டியே அந்த பெண்ணை பல முறை கற்பழித்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்டப் பெண் ஒரு கட்டத்தில் பொருமை இழந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் போலீ ஆசாமி என்பது தெரிய வந்ததோடு, சினிமா தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு பலரை அவர் ஏமாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...