நடிகை, நடிகர் சிலர் குடி போதையில் வாகனம் ஓட்டுவதும், போலீசிடம் சிக்குவதும் அவ்வபோது நடக்கின்றது. நடிகர் ஜெய், நடிகை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது நடிகை ஒருவர் மது போதையில் போலீசாரையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான ரூகி சிங், கடந்த 31 ஆம் தேதி தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது குடி போதையில் இருந்த நடிகை ரூகி சிங், ஓட்டல் ஊழியர்களுடன் தகராரில் ஈடுபட்டதால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், மது போதை தலைக்கேறியதால் நடிகை ரூகி சிங், போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின், தனது நண்பர்களுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டவர், சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நள்ளிரவு நேரம் என்பதால் நடிகை ரூகி சிங்கை கைது செய்யாமல், அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...