அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவதாக நடிக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதனால், இப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத் உள்ளிட பிற மாநிலங்களில் உள்ள ஸ்டியோக்களில் நடத்தலாம், என்று படக்குழு திட்டமிட்டது.
ஆனால், விஜய் இதற்கு மறுப்பு தெரிவித்தார். காரணம், தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்தால் தான், தமிழ்த் திரையுலக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், அதனால், படப்பிடிப்பை சென்னை உள்ளிட்ட தமிழகத்திலேயே நடத்தலாம், என்று கூறினார்.
விஜயின் யோசனைப்படி படப்பிடிப்பு காசிமேடு உள்ளிட்ட வட சென்னைப் பகுதிகளில் நடத்தப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் விஜயை காண நள்ளிரவிலும் படையெடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நேரங்களில் போலீசாரின் தடியடிக்கு பிறகே கூட்டம் கலையும் நிலையும் ஏற்பட்டது. இதனால், படத்தின் முக்கியமான காட்சிகளை திட்டமிட்ட காலத்திற்குள் எடுக்க முடியாமம் படக்குழு திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில், இனி ‘தளபதி 63’ படப்பிடிப்பை ஸ்டுடியோக்களில் மட்டுமே நடத்தினால் தான், குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க முடியும், என்ற முடிவுக்கு வந்த படக்குழு இது தொடர்பாக விஜயிடம் எடுத்து கூறியுள்ளது. பிரச்சினையை புரிந்துக் கொண்ட விஜய், ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடத்த ஓகே சொல்லிவிட்டாராம்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் விஜய், திரும்ப வந்தவுடன் ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஸ்டுடியோக்களில் செட் அமைத்து முழு படப்பிடிப்பையும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...