தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு காரணம், காதல் தான் என்பதை அனைவரும் அறிவர்.
லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வரும் ஸ்ருதி ஹாசன், அவரை சந்திக்க அடிக்கடி லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வதோடு, அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த காதலுக்கு அவரது அப்பா நடிகர் கமல்ஹாசனும், அம்மா சரிகா ஹாசனும் ஓகே சொல்லிவிட்டார்கள். இதனால், ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதனால் தான் படங்களில் நடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து பேசியுள்ள ஸ்ருதி ஹாசன், “நான் தற்போதைக்கு திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ள நான் அவசரப்படவில்லை. எனக்கு பிடிக்கும் போது திருமணம் செய்து கொள்வேன். அது பற்றி நான் தற்போது நினைக்கக்கூட இல்லை.
குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் காதலிப்பது அருமையான அனுபவம். சரியான நபர் கிடைத்தால் அது ஒரு சிறப்பான அனுபவம்.” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...