குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன், நடிப்பதோடு சொந்தமாக திரைப்படங்களும் தயாரிக்க தொடங்கியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘கனா’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, மேலும் சில படங்களை தயாரிப்பதற்கான பணியில் அவரது தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதே சமயம், நடிப்பிலும் முழு கவனத்தை செலுத்தும் சிவா, ரவிக்குமார், மித்ரன், பாண்டிராஜ் ஆகியோரது இயக்கத்தில் நடித்து வருவதோடு, ராஜேஷ் இயக்கத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்தின் கதையை இயக்குநர் ராஜேஷ் சிவாவிடம் சொன்னவுடன் ஓகே சொன்னவர், ஒரே ஒரு கண்டிஷனை மட்டுமே போட்டாராம். அதாவது, படத்தில் ஹீரோயினாக நயன்தாரா, நடிக்க வேண்டும் என்பது தானாம்.
காரணம், படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரம் ரொம்பவே போல்டாக இருக்குமாம், அதற்கு நயன்தாரா தான் சரியாக இருப்பார், அவர் நடித்தால் தான் இந்த படமும் நன்றாக வரும், என்று நினைத்தாராம். இயக்குநர் ராஜேஷ் மனதிலும் அதே எண்ணம் இருந்ததால், நயன்தாராவுக்கு ஓகே சொல்லி, அவரிடம் போனில் கதை சொல்ல, நயன்தாராவும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
அதுமட்டும் அல்ல, ஏற்கனவே சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ‘வேலைக்காரன்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தாலும், அவர்களது காம்பினேஷன் பெரிய அளவில் இல்லை. அந்த குறையை ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் நிவர்த்தி செய்துவிட வேண்டும், என்று முடிவு எடுத்த இயக்குநர் ராஜேஷ், நயன் - சிவா ஜோடிக்கு ஏகப்பட்ட காம்பினேஷன் காட்சிகளை வைத்திருக்கிறாராம்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...