தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தற்போது வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி, ‘சீதக்காதி’, சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்தார். இருப்பினும், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இதற்கிடையே, சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, மற்றொரு தெலுங்குப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
புச்சி பாபு சனா இயக்கும் இந்த படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகவும், மணிஷா ஹீரோயினாகவும் நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ஹீரோவாக மட்டும் இன்றி, சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, தமிழை தவிர பிற மொழிப் படங்களில் நடிப்பதிலும் ஆர்வமாக உள்ளாராம்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...