தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கு காரணம், அவர் தான் காதலிக்கும் லண்டன் நாடக நடிகர் மைக்கேலை விரைவில் திருமணம் செய்ய இருப்பது தான், என்று கூறப்பட்டது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ருதி ஹாசன், காதலிப்பது சுகமான அனுபவம் தான், அதற்காக கல்யாணத்துக்கு நான் அவசரப்படவில்லை. எப்போது எனக்கு கல்யாணம் பண்ணனும் என்று தோன்றுகிறதோ அப்போது, பொருமையாக செய்துக் கொள்வேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனது அப்பாவை போல தனக்கும் அரசியலில் ஈடுபடும் ஆசை வந்துள்ளதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். இதனால், அவர் விரைவில் அரசியலில் நுழையலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ஸ்ருதி ஹாசன், “படங்களில் நடிக்க வில்லை என்றாலும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறேன். இசை பணிகள் முடிந்த பின் மீண்டும் நடிப்பேன். தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளேன். அதே போல் பாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளேன்.
தொடர்ந்து 10 வருடங்களை நடித்து விட்டதால், ஒரு சிறு பிரேக் எடுத்து கொண்டேனே தவிர கதாயாகிகள் போட்டியில் பின் தங்கி விடுவேன் என எப்போதும் பயந்தது இல்லை.
மேலும் என்னுடைய தந்தை அரசியலுக்கு வந்த பின் தனக்கும் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இப்போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆழமாக உற்று பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்சபா என்றால் என்ன என தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...