மாடலிங் துறையில் சாதித்த மீரா மிதுன், தற்போது சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதற்காக, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் இவருக்கு தீனி போடும் விதத்தில் சிக்கியிருக்கிறது ’போதை ஏறி புத்தி மாறி’ படம்.
இப்படம் குறித்து மீரா மிதுனிடம் கேட்டதற்கு, “சீட் நுணியில் உட்கார வைக்கும் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் அர்த்தமுள்ள கதாபாத்திரமாக உள்ளது. தலைப்புக்குண்டான சம்மந்தத்தை படத்தின் கிளைமாக்ஸில் தான் ரசிகர்கள் அறிவார்கள்.
இயக்குநர் கே.ஆர்.சந்துரு குறும்பட இயக்குநர். கதை சொன்ன உடனே இந்த ரோலை செய்துவிட வேண்டும் என்று தோணுச்சு.
படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமான வேலையை செய்யக்கூடிய கதை இது. கவிதை மாதிரி படத்தின் காட்சிகளை பாலசுப்ரமணியம் படம்பிடித்திருக்கிறார்.” என்றார்.
தற்போது, மூன்று முக்கிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வரும் மீரா மிதுன், கதைக்காக மொட்டை அடிக்கவும் தயார், என்று தைரியமாக சொல்கிறார்.
அதுமட்டும் அல்ல, மீரா தேசிய விருது வாங்க வேண்டும், என்று அவரது தந்தை கனவு கண்டாராம். ஆனால், அவர் தற்போது இல்லை. அவரது கனவை நிஜமாக்கும் விதத்தில் கதை அமையும் பட்சத்தில், அந்த படத்தில் சம்பளமே வாங்கமல் நடிப்பேன், என்றும் கூறுகிறார்.
இப்படி தைரியமாக கதைக்காக அனைத்தையும் செய்யும் இவர், கவர்ச்சியில் எப்படி, என்று யோசிப்பது புரிகிறது. மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுனுக்கு கவர்ச்சி எல்லாம் ஜுஜிப்பி போல.
தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், கதையின் முக்கியத்துவத்தைப் பொருத்து கவர்ச்சியில் தாராளம் காட்டவும் ரெடி, என்று கூறுகிறார் இந்த சென்னை பெண்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...