தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரன சிவகார்த்திகேயனை, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில், சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான ‘கனா’ மூலம் வெற்றி இயக்குநராக அருண்ராஜா காமராஜ் அறிமுகமானார்.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிவி பிரபலம் ரியோ ராஜு இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக, ஹீரோயினாக ஷிரின் காஞ்ச்வாலா அறிமுகமாகிறார். இவர் ஜெட் ஏவேஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணியாற்றிருக்கிறாராம்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷிரின் காஞ்ச்வாலா கூறுகையில், “சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சார் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் ஆகிய இருவருக்கும் நன்றி. மொத்த குழுவும் மிகவும் நட்புடன் பழகினர். நான் இந்த படத்தில் பணி புரிந்த ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சிவகார்த்திகேயன், கார்த்திக் வேணுகோபாலன் மட்டுமல்ல, படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர். ரியோ ராஜ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். அவர் இங்கு பல கடினமான காட்சிகளை கூட ஒரே டேக்கில் நடித்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. இது எனது முதல் தமிழ் திரைப்படம். கதை அம்சம் உள்ள நல்ல பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.” என்றார்.
ரியோ ராஜ் மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில பிரபலமான யூடியூப் நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவானாலும், படத்தின் முடிவில் முக்கியமான, ஒரு வலுவான கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழு நம்புகிறது.
ஷபீர் இசையமைக்கும் இப்படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார். பிரதீப் குமார் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் ஆடை வடிவமைப்பையும், கமலநாதன் கலைத் துறையையும் கவனிக்கிறார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...