தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனக்கென்று தனி பாதை வகுத்துக் கொண்டு பயணிக்கிறார். ரசிகர்கள் வேண்டாம் என்று கூறியவர், தனது பட விழாக்களில் கூட கலந்துக் கொள்வதில்லை. அதேபோல், எந்த தொலைக்காட்சிக்கும் அஜித் தற்போது பேட்டி கொடுப்பதில்லை.
ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்த அஜித், பத்திரிகையாளர்களையும் வருடத்திற்கு இரண்டு முறை சந்தித்து வந்தார். தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
எதனால் அஜித், இப்படி ஒதுங்கிப் போகிறார், என்று பலர் பல விதத்தில் யோசித்தாலும், யாருக்கும் உண்மையான காரணம் மட்டும் தெரியவில்லை.
இந்த நிலையில், அஜித் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேச மறுப்பதற்கான காரணத்தை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.
அஜித்தை கோபிநாத் பேட்டி எடுத்த போது இது குறித்து அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அஜித், “சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள்.
சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.
இனி பேசவே வேண்டாம் என்றேன், அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.” என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...