‘விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்தி படம் ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இப்படம். எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன.
இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தென்னிந்திய மொழிகளில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் படத்தில் வித்யா பாலனுக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்ட போதிலும், அப்படத்தில் நடிக்க அவர் மறுப்பு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக பலர் இயக்குகிறார்கள். அவர்களில் இயக்குநர் விஜயும் ஒருவர். விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் வித்யா பாலானை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அனுகியியதோடு, அவருக்கு சம்பளமாக ரூ.24 கோடி கொடுக்க தயாரிப்பு தரப்பு முன் வந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் அந்த படத்தில் வித்யா பாலன் நடிக்க முடியாது, என்று கூறி தவிரித்திருக்கிறார்.
வித்யா பாலன், ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தவிர்த்ததற்கான பின்னணி குறித்து பல தகவல் வெளியாக, தற்போது இந்த விவகாரத்திற்கு வித்யா பாலானே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இயக்குநர் விஜய் படத்தை தவிர்த்தது ஏன்? என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்த வித்யா பாலன், விரைவில் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாலேயே, ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...