ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமர், ராஜ் அர்ஜூன், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. விஜய் இயக்கியிருக்கும் இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கிறார்.
த்ரில்லட் படமாக உருவாகியுள்ள இப்படம் யு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரில்லர், ஹாரர் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்ற நிலையில், இப்படம் யு சான்றிதழ் பெற்றிருப்பது இப்படத்தின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.
வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஜி.வி.பிரகாஷ்குமார், இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், “எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்.” என்றார்.
எடிட்டர் ஆண்டனி பேசுகையில், “இந்த படத்தில் ஒரு நாய் கதாபாத்திரம் இருக்கிறது. இந்த நாய் எப்படி சொல்லிக் கொடுத்த மாதிரி இப்படி நடிக்கிறது என மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் விஜய் பேசுகையில், “ஒரு இயக்குநருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு 5 ஆண்டுகளாக நண்பர், அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராஜ் அர்ஜூன் தாண்டவம், தலைவா, இந்தியில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தவர். வாட்ச்மேன் படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள். சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகிய போது, புதுமையாக இருக்கிறது எனக்கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார். ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும்.” என்றார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “நாச்சியார் படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் விஜய் சார் தான். அவருக்கு 9 படங்களில் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிகனாக நடித்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டுமொத்த தொழில்நுட்ப குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளை கவரும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் சுமன் பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது, இயக்குனர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பல பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் காட்சியை பற்றி ஒரு முறை கேட்பார், நடித்து காட்டுவார். அவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஐதராபாத்தில் 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன்.” என்றார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...