தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், தனது காமெடி மூலம் ரசிகர்களை குலுங்கு குலுங்க சிரிக்க வைப்பவர், தனது வாழ்வில் நடந்த சோகத்தை திரைப்பட நிகழ்ச்சியில் சொல்லி வருத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘வெள்ளைப்பூக்கள்’. முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விவேக் பேசும் போது, “நான் காமெடி வேடத்தில் நடித்து பல படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன. பல புதுமுகங்களுடன் நான் நடித்த படங்கள், காமெடிக்காகவே ஓடியது. ஆனால், நான் கதையின் நாயகனாக நடித்த எந்த படமும் ஹிட் ஆகாதது எனக்கு வருத்தம் தான்.
நான் ஹீரோவாக நடித்த ‘நான் தான் பாலா’ மிகப்பெரிய ஹிட் ஆக வேண்டிய படம். ஆனால், அந்த படம் ரிலீஸாகும் போது கமல் சாரின் ‘பாபநாசம்’ வெளியாகி என் படத்தை நாசம் செய்துவிட்டது. அனைத்து தியேட்டரையும் கமல் சாரே எடுத்துக்கிட்டதால என் படத்திற்கு தியேட்டர் கிடைக்கல. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், தியேட்டர் கிடைத்தால் தானே படத்தை ஓட்ட முடியும். அப்படி போய்விட்டது என் நிலை. ஆனால், இந்த வெள்ளைப்பூக்கள் படம் அந்த குறையை போக்கும் விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது.” என்று கூறி தனது வருத்தத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
இந்த தகவலை நடிகர் விவேக் காமெடியாக பகிர்ந்துக் கொண்டாலும், அவர் உள் மனதில் இருக்கும் சோகத்தால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதோ வீடியோ,
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...