‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், ரஜினிகாந்தின் 167 வது படமான அப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும், என்பதை மட்டும் யாரும் அறியவில்லை.
இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு பஸ் லுக்கையும் வெளியிட்டுள்ளது.
‘தர்பார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரம் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 10) மும்பையில் தொடங்குகிறது.
இதோ ‘தர்பார்’ பஸ்ட் லுக்,
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...