இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிப்பில், சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.கே.நகர்’ படம் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீட்டுக்கு சிலர் தடை போட்டிருக்கிறார்கள்.
படம் அரசியல் படம் என்பதால், தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் செய்துகொள்ளுமாறு சிலர் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார்கள். அதன்படி, அவரும் தேர்தலுக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதே சமயம், படத்தை ரிலீஸ் செய்ய கூடாது, என்று தன்னி நிர்பந்தித்தவர்களின் பெயர்களை சொல்ல விரும்பாத வெங்கட் பிரபு, நாங்கள் செய்யாத தவறுக்காக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ‘ஆர்.கே.நகர்’ அரசியல் படம் அல்ல, பொழுதுபோக்கான படம், என்று தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில், அரசியல் காரணங்களுக்காக வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சில அரசியல் கட்சிகள் செய்திருப்பது மட்டும் தெரிகிறது.
இது தொடர்பான வெங்கட் பிரபுவின் வீடியோவை பார்க்க,
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...