தமிழ் தொலைக்காட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். டிவி பார்க்காதவர்களையும் டிவி முன்பு உட்கார வைத்த பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மாபெரும் வெற்றி பெற்றாலும், இரண்டாவது சீசன் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 3 விரைவில் ஓளிபரப்பாக இருப்பதாக அவ்வபோது தகவல்கள் கசிந்தாலும், அதிகாரப்பூர்வமான தகவல்கள் மட்டும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் மட்டும் அதிமாக வெளியாகிறது.
இந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் சீசன் 3 எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத தகவலாக இருப்பது ஒரு பக்கம் இருக்கையில், அப்படி பிக் பாஸ் சீசன் 3 வந்தால், அது விஜய் தொலைக்காட்சியில் வராது என்றும் வேறு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, என்பதால் பிக் பாஸ் சீசன் 3 தற்போது வரை கானல் நீராகவே உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...