‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தி படமான ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் போனி கபூர் தயாரிக்கிறார்.
தற்போது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்தின் நடிப்பு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வியந்து பாராட்டியுள்ளார்.
’நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமூக வலைதள பக்கத்தில், “அஜித்தின் நடிப்பு அபாரம், விரைவில் அஜித் இந்தி படத்தில் நடிப்பதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு மூன்று ஆக்ஷன் கதைகள் இருக்கிறது. ஆனால், ”மூன்று கதைகளிலும் தன்னால் நடிக்க முடியவில்லை என்றாலும், ஒரு இந்தி படத்திலாவது விரைவில் நடிப்பேன்.” என்று அஜித்தின் கூறியதாக, தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...