ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த கஸ்தூரி, தெலுங்கு சினிமாவில் படு கவர்ச்சியாகவும் நடித்தார். பிறகு கல்யாணம், அமெரிக்கா என்று பறந்தவர், கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் முகாமிட்டுள்ளவர், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது சமூக வலைதளங்களில் எதாவது கருத்து சொல்வதையும், குத்து பாட்டுக்கு ஆட்டம் போடுவதையும் வேலையாக வைத்திருக்கும் கஸ்தூரி, கருத்து சொல்லியே தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அப்படி அவர் கூறிய பல கருத்துக்கள் சீ...ரகங்களாகவும் இருப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஐபில் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, அதற்கு ஊதாரணமாக, ”என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க” என்று கூறினார்.
கஸ்தூரியின் இந்த சீப்பான கருத்தால் நெட்டிசன்கள் பலர் அவர் மீது காரி துப்பாத குறையாக அவரை வறுத்தெடுத்து வருவதோடு, அவர் நடித்த பழைய படங்களை சுட்டிக்காட்டி “நீ யோக்கியமா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், கஸ்தூரியின் இந்த கேவலமான பேச்சு பற்றி நடிகை லதா கூறுகையில், “ஏன், அந்த பெண் இப்படி கேவலமான பப்ளிசிட்டியை தேடுறாங்க. எம்.ஜி.ஆர் அவர்களை பல லட்சம் மக்கள் கடவுளாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவரை இப்படி அசிங்கப்படுத்தலாமா?
பெண்ணியம் குறித்து பேசும் அந்த பெண், பெண்ணை பற்றி இப்படி கருத்து கூறுவது சரியா, அப்படியே அவர் எடுத்துக்காட்ட வேண்டும் என்றால் அவர் நடித்த படங்களில் இருந்து எடுத்துக்காட்டு கூறியிருக்கலாம், அதை விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையை இப்படி அவமானப்படுத்தலாமா?, சமீபகாலமாக இப்படி இழிவாக பேசி வரும் கஸ்தூரி இதை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.” என்று தெரிவித்துள்ளார்.
கஸ்தூரிக்கு பலர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தாலும், அம்மணி இதையும் ஒரு பப்ளிசிட்டியாக எடுத்துக் கொண்டு குஷியாக இருப்பார் என்றாலும், எங்காயாவது பொதுவெளியில் இந்த கருத்துக்காக அவர் எம்.ஜி.ஆர் தொண்டர்களிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும், என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...