Latest News :

எனக்கும் இந்த சினிமாவில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும்! - ‘நட்பே துணை’ நடிகரின் நம்பிக்கை
Wednesday April-10 2019

சமீபத்தில் வெளியான ’நட்பே துணை’ படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர் அஸ்வின். நெகடிவ் காரக்டர் போன்று ஆரம்பமாகி அப்புறம் பாசிடிவ் காரக்டராகி ஆதியின் நண்பராக  நடித்திருப்பவர். 

 

படத்தை பார்த்த பலரின் பாராட்டினால் குளிர்ந்து போயிருக்கும் அஸ்வின், தனது சந்தோஷத்தை நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளும் போது, “நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்து விட்டு ஹில் பிரீஸ் ஹோட்டல் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன். கை நிறைய சம்பளம், கெளரவமான வேலை என்று இருந்தவன். அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

 

Actor Ashwin

 

அந்த நேரத்தில் ’யானும் தீயவன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போச்சி.

 

அதற்கப்புறம் ’பஞ்சாட்சரம்’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன், அந்தப்படம் விரைவில் ரிலீசாகப் போகுது. என்னை நானே டெவலப் செய்து கொள்ள வேண்டும் என்று கூத்துப் பட்டறைக்குப் போய் பயிற்சி எடுத்தேன். அதற்கு எனக்கு கிடைத்த பரிசு  ஹிப் ஆப் ஆதி அவர்கள் மூலம், ’நட்பே துணை’ படத்தின் மூலம் கிடைத்தது.

 

Actor Ashwin

 

எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.c.சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இது தான் வேண்டும். இதில் தான் நடிப்பேன் என்று இல்லை. எந்த காரக்டராக  இருந்தாலும் சரி, ஹீரோ வில்லன் காரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் நான் என்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கேன்.

 

என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்...அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

 

Actor Ashwin

 

எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Related News

4567

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

Recent Gallery