சினிமாவை பொருத்தவரையில் ஹீரோக்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த நிலை தற்ஓது சிறுது மாறத்தொடங்கியுள்ளது. முன்னணி ஹீரோயின்கள் சிலர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கான கதவை தமிழ் சினிமாவில் திறந்தவர் என்றால் அது நயன்தாரா தான்.
தற்போது, நயன்தாரா வழியில் பல நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, அதுபோன்ற கதைகள் கேட்பதில் ஆர்வமாகவும் இருக்கிறார்கள்.
அதே சமயம், ஒரு படத்திற்கு ஹீரோக்கள் காட்டும் ஈடுபாட்டை சில ஹீரோயின்கள் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. குறைவான வசதிகள் இருந்தாலும், அதை படத்திற்காக ஹீரோக்கள் அட்ஜெஸ்ட் செய்தாலும், ஹீரோயின்கள் மட்டும் அந்த விஷயத்தில் கரார் காட்டுவது வழங்கமான ஒன்று தான். சில ஹீரோயின்கள், படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே எஸ்கேப் ஆகி படக்குழுக்கு டென்ஷன் கொடுக்கும் சம்பவங்களும் ஏராளாம்.
அப்படி ஒரு சம்பம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் படத்தில் அந்த சம்பவம் நடந்திருக்கிறது.
செல்வபாரதி இயக்கத்தில் விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும். இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆனது. இதில், ரம்பா, தேவயானி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருப்பார்கள்.
விஜய் - ரம்பா காம்பினேஷன் காட்சிகளுக்காக படக்குழு அவுட்டோரில் முகாமிட்டிருந்ததாம். அப்போது, படக்குழு திட்டமிட்டபடி காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், சில காட்சிகள் மட்டும் மீத இருந்ததாம், அதற்கான படப்பிடிப்பும் நடைபெற இருந்த நிலையில், நடிகை ரம்யா, சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக, சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
இதனால், இயக்குநர் செல்வபாரதி டென்ஷன் ஆகிவிட்டாராம். இருந்தாலும், சூழ்நிலை சமாளித்து, டூப் போட்டு மீதம் உள்ள காட்சியை படமாக்கி முடித்தாராம். அது தான் “வண்ண நிலவே...” பாடல் காட்சியாம். இதனால் தான் அந்த பாடலில், ரம்பா முகத்தை காட்டாமல் பாடல் முழுவதும் படமாக்கப்பட்டு இருக்குமாம்.
விஜயின் எவர்கீரின் ஹிட் பாடல்களில் ”வண்ண நிலவே...” பாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...