Latest News :

பணத்திற்காக ரூட்டை மாற்றிய கண் சிமிட்டல் நடிகை பிரியா வாரியர்!
Thursday April-11 2019

கண் சிமிட்டல் வீடியோ மூலம் ஒரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமான மலையாள நடிகை பிரியா வாரியர். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே அப்படத்தில் இடம்பெற்ற கண் சிமிட்டல் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பத்திக்கொண்டதால், பிரியா வாரியர் இந்தியா முழுவதும் தெரிந்த முகமானார்.

 

ஒரு இரவில் ஓவர் பாப்புலாரட்டி கிடைத்ததால் பிரியாவுக்கு ஒண்ணுமே புரியவில்லை. இதையடுத்து, ஏகப்பட்ட விளம்பர பட வாய்ப்புகள், பட வாய்ப்புகள் பிரியா வாரியருக்கு வர, அம்மணியோ சம்பள விவகாரத்தில் கரார் காட்டியதோடு, படம் வெளியான பிறகு பிற படங்களில் கமிட் ஆனால், கூடுதல் பணம் கிடைக்கும் என்று படத்தில் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருந்தார். ஆனால், ஒரு அடார் லவ் படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. 

 

மேலும், அப்படம் தோல்வியடை பிரியா வாரியர், கதையிலும், காட்சிகளிலும் செய்த மாற்றம் தான் காரணம், என்று இயக்குநர் ஸ்டேட்மெண்ட் கொடுக்க, பிரியா வாரியருக்கு படங்கள் வாய்ப்பு வருவது நின்று போனது. எதிர்ப்பார்த்து ஏமாந்துப் போன பிரியா, தற்போது பணம் சம்பாதிக்க ரூட்டை மாற்றியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

தற்போது விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிக்கும் பிரியா வாரியர், இன்ஸ்டாகிராமில் தனக்கு உள்ள 68 லட்சம் ரசிகர்களை வைத்தும் பணம் சம்பாதிக்க தொடங்கியிருக்கிறார்.

 

அப்படி ஒரு விளம்பர புகைப்படத்தை பதிவிடும்போது, அந்த நிறுவனம் அனுப்பிய இ-மெயிலை அப்படியே எடுத்து பதிவிட்ட பிரியா வாரியர், ரசிகர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார். “Text Content for Instagram and Facebook” என்று நிறுவனம் அனுப்பிய சப்ஜட்டுடன், தனது இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியர் அந்த விளம்பரத்தை போட, அதை பார்த்த ரசிகர்கள், அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

 

Priya Warrior

Related News

4575

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery