உதவி இயக்குநர்களின் கதையை திருடுவதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், தற்போது தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவருக்கு அவர் கைகொடுக்க முன் வந்திருக்கிறார்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய சரவணன், பல மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
தற்போது மீண்டும் படம் இயக்க முயற்சித்து வந்த இயக்குநர் சரவணனுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகொடுத்திருக்கிறார். அவர் லைகா நிறுவனத்திடம் பேசி சரவணனுக்கு பட வாய்ப்பு பெற்று தந்ததோடு, அந்த படத்திற்கு கதையும் எழுதி கொடுக்கிறாராம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் திரிஷா நடிக்க, பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...