‘விஸ்வாசம்’ பெற்ற மாபெரும் வெற்றியால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அஜித் தொடர்ந்து மூன்று முறை சிவாவுடன் இணைந்து தோல்விப் படம் கொடுத்ததால் துவண்டு போன ரசிகர்களுக்கு அவர்களது கூட்டணியின் நான்காவது படமான ‘விஸ்வாசம்’ எனர்ஜி டானிக்காக அமைந்திருக்கிறது.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை முடித்திருக்கும் அஜித், தற்போடு குடும்பத்தோடு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கிடையே, அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்த படக்குழு பிறகு ரிலீஸ் தேதியை மாற்றியதால், ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்கள். இதை அறிந்த அஜித், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை தனது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி அறிவிக்க முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக, தனது அடுத்தப் படம் குறித்த பேச்சு வார்த்தையில் அஜித் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அதே சமயம், அவரது அடுத்தப் படத்தை இயக்கும் இயக்குநர் யாராக, இருப்பார் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரிக்கும் போனி கபூர் தயாரிப்பில் இன்னொரு படம் அஜித் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை வினோத்த இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதேபோல், வெங்கட் பிரபு ‘மங்காத்தா 2’ கதையை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு, அஜித்தை இரண்டு முறை சந்தித்தும் விட்டார். இதனால், வெங்கட் பிரபுவுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவதாக, அஜித்துக்கு மாபெரும் வெற்றிக் கொடுத்த சிவாவும் தற்போது லிஸ்ட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவற்றுடன், போனி கபூர் அஜித்தை இந்தியில் சோலோ ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாகவும், அதற்காக மூன்று ஆக்ஷன் கதைகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், அஜித் எந்த இயக்குநருடன் இணைந்தாலும், அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவிப்பது மட்டும் உறுதி, என்று நம்பந்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...