நடிகர் விஜய் அரசியலில் ஈடுபாடு காட்டி வருவதோடு, தனது படங்களில் மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விமர்சித்து வருகிறார். மேலும், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றி, அதன் மூலம் பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.
இதற்கிடையே, விஜயின் மக்கள் இயக்க அமைப்பை அரசியல் கட்சியை போல, பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதோடு, தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உருவாக்கி அவற்றுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் வலுவான மற்றும் கட்டுப்பாடான இயக்கமாக மாறியிருப்பதோடு, எதிர்காலத்தில் விஜய் அரசியல் பிரவேசம் உறுதி என்பதையும் இது நிரூபிக்கிறது.
அதேபோல், தேர்தல் நேரங்களில் விஜயின் ஆதரவை பெற பல முன்னணி அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தாலும், விஜய் இதுவரை யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே ஒரு முறை ஆதரவு தெரிவித்ததோடு, அவரது ரசிகர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டவர், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் குறித்து தனது ரசிகர்களுக்கு நிர்வாகிகள் மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள நடிகர் விஜய், தேர்தலில் தனது படம் மற்றும் மக்கள் இயக்க கொடியை ரசிர்கள் பயன்படுத்த கூடாது என்றும், பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளாராம்.
ரஜினி, கமல் ஆகியோர் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், விஷாலும் அரசியலில் அதிக ஈடுபாட்டு காட்டு வருகிறார். அதேபோல், நடிகர் விஜயும் அரசியல் பிரவேசத்திற்கான சரியான தருணத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...