தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் படத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியிருக்கிறது. தற்போது பாகுபலி இயக்குநர் சந்திரமெளலி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களின் பார்வை கீர்த்தி சுரேஷ், மீது விழுந்துள்ளது.
இந்த நிலையில், கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ படத்தில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து வைத்திருந்தாராம். அவர் ஏற்கனவே, ‘சர்கார்’ படத்தில் கீர்த்தியுடன் பணியாற்றியதால், அவரையே இந்த படத்திலும் ஹீரோயினாக்கி விடலாம் என்று நினைத்தாராம்.
இதை ரஜினியிடம் தெரிவித்த போது, சற்று யோசித்த ரஜினி, அவர் எனக்கு செட்டாக மாட்டார், நயன்தாரா சரியாக இருப்பார், என்று கூறிவிட்டாராம். அதனால் தான் படக்குழு கீர்த்தியை விட்டுவிட்டு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்களாம்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...