80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. தனது சினிமா வாழ்க்கையில் 40 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஷோபனா, நடிப்பு மட்டும் இன்றி நாட்டியத்திலும் தனது திறமையை நிரூபித்தவர், தற்போது ஏராளமான மாணவர்களுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகிறார்.
நடிப்புக்கு முழுக்கு போட்ட ஷோபனா முழுக்க முழுக்க நாட்டியத்தில் மட்டுமே ஈடுபாடை காட்டி வரும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
மலையாள சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக வலம் வரும் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் தான் ஷோபானா நடிக்கிறார்.
பெண்ணை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
2005 ஆம் ஆண்டு வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்திற்கு பிறகு ஷோபனாவும், சுரேஷ் கோபியும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கோச்சடையான், மலையாளப் படம், தெலுங்குப் படம் என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஷோபனா, ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலமே நடிக்கிறார். இதன் மூலம், ஷோபனாவின் 15 ஆண்டுகால தவம் கலைந்தது.
பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுவதால், தேர்தலுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...