நடிகை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், லையா புரொடக்ஷன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவுக்கு துணையாக விக்னேஷ் சிவன் மும்பையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
’தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்னேஷ் சிவன், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை தொடர்ந்து, ‘தர்பார்’ படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஜினியை சந்தித்துவிட்டு, இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்காவுக்கு சென்ற விக்னேஷ் சிவன், அங்கு இஸ்லாம் முறைப்படி தலையில் தொப்பி அணிந்து வழிபாடு நடத்தியதோடு, சிறப்பு பிரார்த்தனையும் செய்திருக்கிறார்.
தற்போது, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டதும், அதை பார்த்த ரசிகர்கள், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே, இசையமைப்பாளர் யுவ சங்கர் ராஜா, சிம்புவின் தம்பி குறளரசன், நடிகை மோனிகா உள்ளிட்ட சில தமிழ் சினிமா பிரபலங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...