சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘காப்பான்’ பட டிரைலரில் “போராட்டம் நடத்துறது தப்புனா, போராடும் சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என்று சூர்யா வசனம் பேசியிருக்கிறார்.
இந்த வசனம், நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பதாக இருப்பதாக, கூறி வருகின்றனர். காரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
ஆக, போராட்டம் வேண்டாம் என்று கருத்து கூறிய ரஜினிகாந்தை விமர்சிக்கும் விதத்தில் தான், ‘காப்பான்’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...