தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கலைகட்டியுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் பலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பிரசாரத்தில் கலந்துக் கொண்ட நடிகை குஷ்பு, தன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட தொண்டர் ஒருவரை, அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரபல அரசியல் தலைவர் ஒருவர் பிரபல நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களைவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரான ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிருகிறார். சமீபத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், நடிகை ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.
ஆசம் கானின் இந்த வீடியோ பேச்சு வைரலாகியுள்ள நிலையில், அவருக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, தனது கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளாராம்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...