’ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு ’தோள் கொடு தோழா’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. இதில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக மும்பையை சேரெந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஹரி, ராகுல், பிரேம் ஆகிய மூன்று அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டான நேற்று பூஜையுடன் செனையில் நடைபெற்றது. இதில், கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கெளதம் படம் குறித்து கூறுகையில், “படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது, அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. இப்படம் தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்கும்.” என்றார்.
கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ பீட்டர் இசையமைக்கிறார். எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்ய, செந்தில் கலையை நிர்மாணிக்கிறார். அசோக்ராஜா நடனம் அமைக்க, தளபதி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். விவேகா, சுந்தர் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பி.மனோகரன் தயரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
வரும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் ஆகிய இடங்களில் படமாக்க உள்ளார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...