‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், கசர்ச்சியில் மட்டும் இன்றி, அடல்ட் வசனம் பேசுவது மற்றும் சில்மிஷங்களில் தாராளம் காட்டி நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை அடல்டு ஒன்லி படங்களாகவே வருகிறது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் யாஷிகா ஆனந்த், ரசிகர்களிடம் பேசும் போது கூட கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் பேச தயங்குவதில்லை.
இந்த நிலையில், சென்ன்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள எஸ்.கே.எல்.எஸ் கேலக்ஸி மாலின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட யாஷிகா, கன்னடம் மற்றும் தமிழில் உருவாகும் பேய் படம் ஒன்றில் நடிப்பதோடு, 18 பிளஸ் பார்க்ககூடிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாகவும் கூறினார். மேலும், இந்த வெப் சீரிஸில் அடல்ட் கண்டண்ட் மட்டுமே இருக்காது, ரசிக்க கூடிய பல நல்ல கண்டண்டும் இருப்பதாக தெரிவித்தவரிடம், “சமூக வலைதளங்களில் தொடர்ந்து காண்டர்வரியாக பேசுவது ஏன்? என்று கேட்டதற்கு, “நான் பிளான் செய்து அப்படி பேசுவதில்லை, சமூக வலைதளங்களில் என்னை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பேன். மற்றவர்கள் என்னைப் பற்றி தவறாக பதிவிட்டால் அதை பார்த்துவிட்டு அமைதாக போக மாட்டேன், அப்படிப்பட்ட ஆளும் நான் இல்லை, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்.” என்று கூறினார்.
வீடியோவை பார்க்க
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...