தமிழ் மட்டும் இன்றி பிற மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பால், இந்தியில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படம் என்று கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.
தமிழை பொருத்தவரை அமலா பால் நடிப்பில் அடுத்ததாக ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’ ஆகிய இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது ‘கடவர்’ என்ற படத்தை அவர் தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்றால் உடனே கேட்பதற்கு அப்பாய்மெண்ட் கொடுக்கும் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ பஸ்ட் லுக் போஸ்டரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் உள்ள அப்படக் குழுவினர், சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக, சென்சார் குழுவினரிடம் பெரிய போராட்டத்தையே நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்திற்கு நிச்சயம் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்றாலும், படத்திற்கு முக்கியமான காட்சிகளில் கை வைக்காமல் ஏ கொடுத்தால் போதும், என்ற மனநிலையில் படக்குழுவினர் இருக்கிறார்களாம்.
ஏ சான்றிதழ் பெற்றாலும், படத்தில் சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...