நடிகரும், இயக்குநருமான் ராகவா லாரன்ஸ், நேற்று சீமானின் பெயரை குறிப்பிடாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சீமான் மீதும், அவரது பேச்சு மீதும் பெரிய மாரியாதை வைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் அவர் தன்னை மேடை ஒன்றில் விமர்சித்து பேசியதாகவும், அன்றில் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் தன்னை பற்றி மோசமாக விமர்சிப்பதோடு, தனது மாற்றுத்திறனாளி பிள்ளைகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தெரிவித்திருந்தார்.
மேலும், இது பிரச்சினையை பேசி முடித்துக் கொள்ள தான் விரும்புகிறேன், ஆனால், அதற்கு நீங்கள் தயார் இல்லை என்றால், அதை வேறு விதத்தில் சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன், என்று எச்சரிக்கை விடும் தோனியில் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸின் அறிக்கை குறித்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சீமானிடம், நேற்று மாலை நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த சீமான், ”லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை, மதிப்புதான். அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாரு. உதவுறாரு. அவர் சேவை குணம் மீது எனக்கு மதிப்பு இருக்கு. யாராவது ரெண்டு பேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு. அது யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கலாம். ஏன்னா, லாரன்ஸ் தம்பிய ஒரு எதிரியா பார்க்க வேண்டிய தேவையே நமக்கு இல்லை. யாராவது ஒருவர் நம்ம பேர்ல போட்டுவிட்டு வம்பு இழுப்பாங்க. போலியான முகநூல் பக்கங்களை வச்சிக்கிட்டு, நான் பேட்டு கொடுக்காமலேயே, நா பேசினதா போடுறாங்க. அந்த மாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செய்திருந்தால் அது தவறு. அதற்காக நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...