அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது அறிமுக இயக்குநர்கள் படங்களில் நடிக்க சற்று யோசிக்கிறார்கள். அதனால் தான், தொடர்ந்து ஒரே இயக்குநரின் படங்களிலேயும் நடித்து வருகிறார்கள்.
ஆனால், இவர்களைப் போல அல்லாமல், கதை தேர்வில் கவனம் செலுத்தி அதே சமயம் புதுமுகங்களையும் அரவணைத்து, பல இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை நடிகர் பிரபுவுக்கு உண்டு.
இளைய திலகம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் பிரபு, 80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோவாக இருந்த போது 81 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறாராம். தற்போது, அவர் கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநரா ஹரி சந்தோஷ், என்பவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
ஹரி தினேஷ், கன்னடத்தில் இயக்கிய ‘காலேஜ் குமாரா’ படத்தை தமிழில் ‘காலேஜ் குமார்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்கிறார். இதில் ராகுல் விஜய் ஹீரோவாகவும், பிரியா வட்லமணி ஹீரோயினாகவும் நடிக்க, பிரபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மதுபாலா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சாம்ஸ், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் துவக்க விழா தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் பிரபு பேசுகையில், “கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்“ என்றார்.
நடிகை மதுபாலா பேசுகையில், “ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம்.
பிரபு சார் இருக்காங்கன்னு சொன்ன உடனே 20 வருஷத்துக்குப் பிறகு பிரபு சாரோட இந்தப் படத்துல நடிக்கப் போறோம்னு சந்தோஷத்துல இருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங் நேரத்துல பொள்ளாச்சில என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா தங்கை மாதிரி பார்த்துக்கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்புதான் காரணம். 20 வருடத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார்.” என்றார்.
எம்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் எல்.பத்மநாபன் தயாரிக்கும் இப்படத்திற்கு குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகனான ஏ.எச்.காசிப் இசையமைக்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...