Latest News :

”கற்பை பற்றி எனக்கு பேச தெரியாது” - நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு
Tuesday April-16 2019

‘முடிவில்லா புன்னகைவேலுபிரபாகரன் அளவுக்கு கற்பை பற்றி எனக்கு பேச தெரியாதுகற்பை பற்றி எனக்கு பேச தெரியாது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “வேலுபிரபாகரன் எனக்கு அறிவுமிக்க ஆசிரியர், நான் அவருக்கு மக்கு மாணவி. பெரியார் கூறிய கருத்துக்கள், பெரியாரை பற்றி நான் அறிந்தது வேலுபிரபாகரரை ஒப்பிட்டு பார்த்தால் நான் பூஜ்ஜியம் தான். அவர் அளவுக்கு கற்பைப் பற்றி பேச எனக்கு தெரியாது. அதனால் நான் கருப்பில் இருந்து ஆரம்பிக்கிறேன். சினிமாவின் தொடக்கக் காலத்தில் கூட கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.ராஜகுமாரி போன்ற நம் நாட்டு நிறத்தில் இருப்பவர்கள் நடித்தார். ஆனால், எப்போது நாம் வெள்ளையர்களை பார்த்து காப்பி அடிக்க ஆரம்பிச்சோமோ அப்போதிருந்துதான் இந்த பிரச்சனையும் ஆரம்பித்தது. இயக்குநர் மகேந்திரன் ஷோபோ, அஸ்வினி, சுஹாசினி போன்ற நம் மண்ணின் நிறத்தையுடைய திறமையான கதாநாயகிகளை கொண்டு வந்தார். அதேபோல தான் சரிதா, சுஜாதா, சுகன்யா போன்றோர்களும். ஆனால், ரஜினிகாந்த் முதல் பிரகாஷ்ராஜ் வரை கருப்பான நாயகர்களை தமிழ்நாட்டிற்கு பரிசாக தந்த பாரதிராஜா, தானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், கதாநாயகி மட்டும் ரியா சென் என்று வெள்ளை நிறத்தில் வடநாட்டு பெண்ணை அறிமுகம் செய்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார், என்ற குற்றச்சாட்டு அவர் மேல் எனக்கு உண்டு. அதேபோல், ஷங்கர் ஒருபடி மேல சென்று ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனையும் நம்ம ஊர் பெண் என்று தாவணி போட்டு இவர் தமிழ்நாட்டு பெண் என்று மாற்றிவிட்டார்.

 

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்று பகுத்தறிவு பேச வேண்டிய ஒரு கருவியாக இருக்க வேண்டிய சினிமா இன்று, பாசாங்குகளை மட்டுமே பரப்பிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கிறது. மற்றபடி சினிமாவை பார்த்துதான் நான் பெண்ணை கற்பழிக்கின்றேன் என்று கூறினால், அப்படிப்பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமாவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் அந்த வன்மத்தை ஒரு குழந்தையின் மீதா காட்டுவீர்கள்?

 

நிஜத்தில் நடப்பதைத்தான் சினிமாவாக எடுக்கிறோம் என்று கூற்றை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். ஹாசினி விஷயத்தை படமாக எடுக்க முடியுமா? பொள்ளாச்சியில் நடந்ததை படமாக எடுக்க முடியுமா? அப்படி எடுத்தால் நம்மால் பார்க்க முடியுமா? இதுபோன்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பாரா? அல்லது பல லட்சகணக்கான ரசிகர்கள் அதை ஏற்றுக் கொண்டுதான் இருப்பார்களா?

 

பெண் விடுதலை என்று கூறி எங்களை கட்டிபோடாதீர்கள். கற்பழிக்காமல் இருந்தாலே போதும். சுயவிருப்பத்திற்கும் அத்துமீறலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெண்கள் ஊடகத்துறையிலோ, சினிமாத் துறையிலோ முன்னேறினால், இவர்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள் தெரியுமா? என்று கொச்சையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு, சமஉரிமை இதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்ச மரியாதை கொடுத்தாலே போதும்.

 

இச்சூழலில், உண்மையை மட்டுமே நம்பி அமெரிக்காவிலிருந்து வந்து, ‘முடிவில்லா புன்னகை’ என்ற நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து இப்படத்தை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார். 

Related News

4620

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

Recent Gallery