கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீனுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. அவர், ‘மூடர் கூடம்’ படத்தில் நடித்த சிந்து ரெட்டி என்ற பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டார்.
அப்படியானால் முதல் மனைவி யார்? என்று யோசிக்கிறீர்களா, முதல் மனைவியும் இதே சிந்து ரெட்டி தான். அதாவது, மூடர் கூடம் படப்பிடிப்பின் போதே நவீனுக்கும், சிந்துவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், ‘மூடர் கூடம்’ படம் வெளியான உடனே அவர் சிந்துவை திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, ’மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து ‘கொளஞ்சி’ என்ற படத்திற்கு கதை எழுதியதோடு, அப்படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகாத நிலையில், 6 வருடங்களுக்கு பிறகு ’அலவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்து வருவதோடு, விஜய் ஆண்டனியை வைத்து ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் நவீன் சிந்து ரெட்டியை பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதோடு புகைப்படமும் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்ட சிந்து ரெட்டியை, நவீன் மீண்டும் ஏன் திருமணம் செய்தார், என்பது புரியாத புதிராக இருக்கிறது.
திருமணம் செய்துக் கொண்டதை தற்போது தெரிவித்திருப்பவர், முதலில் நடந்த திருமணம் பற்றியும், தற்போது நடந்த இரண்டாவது திருமணத்தின் அவசியம் பற்றியும் அவரே கூறினால் தான் இந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.
அது எப்படியோ, திருமணம் செய்துக் கொண்ட இயக்குநர் நவீன் - நடிகை சிந்து ரெட்டி தம்பதிக்கு cinemainbox.com சார்பில் வாழ்த்துகள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...