ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிரிப்பில், எல்.சுரேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நீயா 2’. வித்தியாசமான பாம்பு படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்க, ஹீரோயின்களாக வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோர் நடிக்க முக்கிய வேடம் ஒன்றில் ராஜநாகம் ஒன்றும் நடித்திருக்கிறது.
ஜெய்யும், ராய் லட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ஜெய்க்கு கேத்தரின் தெரசாவுடன் திருமணம் நடைபெறுகிறது. இதை அறியும் ராய் லட்சுமி ஜெய்யை தேடி வர, ஜெய்யும், அவரது மனைவியான கேத்தரின் தெரசாவும் படுக்கையில் சந்தோஷமாக இருப்பதை பார்த்துவிட்டு கோபமடைகிறார். கோபமடைந்த ராய் லட்சுமி, அவர்களை என்ன செய்தார்? என்பதே அடுத்தக் காட்சியின் தொடர். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் ட்விஸ்ட்டை வைத்து சுவாரஸ்யமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் எல்.சுரேஷ், இப்படத்தில் நான்காவது ஆளாக வரும் வரலட்சுமி வேடத்தில் மிகபெரிய ட்வீஸ்ட் வைத்திருக்கிறார்.
தனது காதலனை அடைந்தே தீருவேன் என்பதில் தீவிரமாக இருக்கும் ராய் லட்சுமி, எப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்தாலும் கணவனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கேத்தரின் தெரசா, காலம் காலமாக காத்திருக்கும் வரலட்சுமியின் வைராக்கியம் மற்றும் ஜெயின் தியாகம், என்று பரபரப்பான அதே சமயம் கலர்புல் படமாகவும் உருவாகியிருக்கும் ‘நீயா 2’ வரும் மே 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...