தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித், படங்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் ஓபனிங் இருக்கும். அதிலும், ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியால், அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்திய ‘விஸ்வாசம்’ படத்தின் லாபம் மட்டுமே சுமார் ரூ.15 கோடிக்கு மேல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தை ரூ.45 கோடிக்கு விற்றதாகவும் சொல்கிறார்கள்.
’விஸ்வாசம்’ படத்தின் மிகப்பெரிய வசூலால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்திருக்கிறார். ஆனால், அப்படத்தில் அஜித் குறைவான காட்சிகளில் வருவதால், படத்தை ரூ.35 கோடிக்கு கேட்கிறார்களாம்.
இந்த தொகையை ஏற்க மறுக்கும் போனி கபூர், ‘விஸ்வாசம்’ படத்தை விட அதிகமான தொலைக்கு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், ரூ.50 கோடிக்கு தான் படத்தை கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம்.
போனி கபூரின் பிடிவாதத்தால் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கும், வியாபாரத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...