தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கருணாஸ், நடிகை மீனா, தயாரிப்பாளர் தனசெயன் உள்ளிட்ட பலர் வாக்களித்தார்கள்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் தனது தம்பியும் நடிகருமான கார்த்தி மற்றும் குடும்பத்தோடு, சென்னை தி.நகர் வாக்குச் சாவடியில் காலை ஓட்டுப் போட்டார்.
ஒட்டு போட்ட சூர்யா, தேர்தல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...