இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், ஒட்டு மொத்த இந்தியர்களின் பேவரைட் விளையட்டாக கிரிக்கெட் உருவெடுத்திருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து வைத்து கெளரவித்துள்ளார்.
இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் எம்.பி.கோபி ஆகியோர் தங்களது சொந்த ஊரான உசிலம்பட்டி இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவிப்பதற்காக, தாங்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்துக்கொண்டன.
இதில் வெற்றி பெற்ற அணியை சென்னைக்கு வரவைத்த நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படப்பிடிப்பில் சந்தித்ததோடு, அங்கேயே அவர்களுக்கு மதியம் விருந்து வைத்து, விருது கொடுத்து கெளரவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனிடம் விருது பெற்ற வீரர்கள், கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நாங்கள், சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது பெற்றதை நினைத்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம், என்றார்கள்.
இது குறித்து இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் எம்.பி.கோபி கூறுகையில், “நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போது தான் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த ’கனா’ படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.
அதன் காரணமாக சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம். அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால், அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும், அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும், அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் அவர்களையும், மிஸ்டர் லோக்கல் பட இயக்குநர் ராஜேஷ்.எம் அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.
இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி.” என்றனர்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...