தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் அருள்நிதியின் அடுத்தப் படம் ‘K13’. இதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் தான். எஸ்.பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.சங்கர் மற்றும் சாந்தபிரியா
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் படத்தின் இசையை வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு, கோடை விடுமுறையில் படத்தையும் வெளியிட போகிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.பி.ஷங்கர் கூறுகையில், “டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்.” என்றார்.
மற்றொரு தயாரிப்பாளர் சாந்திபிரியா கூறுகையில், “தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்.” என்றார்.
சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...