தமிழ் சினிமாவின் சச்சை மன்னனான சிம்பு, எதாவது சர்ச்சையில் சிக்குவதும், வம்பில் மாட்டுவதும் என்றிருந்த நிலையில், தற்போது அனைத்தையும் குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல், மக்கள் நல குறித்தும், சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசி வரும் சிம்பு, தேர்தல் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தியதோடு, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் கூற, சிம்பு மட்டும் மிஸ்ஸிங்.
சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்த தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என்பதால், அவர் வருவர் என்று பத்திரிகையாளர்கள் எதிர்ப்பார்த்திருக்க, சிம்பு வராமல் ஓட்டு போடுவதை தவிர்த்துவிட்டார்.
சிம்பு ஓட்டு போடுவதை தவிர்த்தது ஏன்? என்று கேள்வி எழ, அதற்கு அவரது தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு ஓட்டு போடாததற்கான காரணத்தை கூறிய டி.ஆர், சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. அதனால் தான் வரவில்லை, என்று தெரிவித்தார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...