தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பொதுமக்களை போல சினிமா பிரபலங்கள் பலரும் விஜயின் ரசிகர்களாக இருப்பதோடு, அதை பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டின் போது கருணாகரன் தனது சமுக்க வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, விஜய் ரசிகர்களை கோபப்படுத்த, அதை தொடர்ந்து அவர்கள் கருணாகரனுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பதில் பதிவு வெளியிட்டார்கள். அதற்கு கருணாகரனும் பதில் அளிக்க, இரு தரப்பினரும் சில சமயங்களில் மோசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள்.
இந்த பிரச்சினைக்கு இடையே, கருணாகரன் மீது தயாரிப்பாளர் ஒருவர், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார், என்று புகார் கூறியதை தொடர்ந்து கருணாகரன், சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு அப்படியே செய்தார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்திருக்கும் கருணாகரன், பாராளுமன்ற தேர்தலில் தான் வாக்குப் பதிவு செய்ததை தெரிவித்திருப்பதோடு, நடிகர் விஜயிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருணாகரன் வெளியிட்ட பதிவில், “நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க ஒருசில வார்த்தையை நான் பயன்படுத்தியது தவறுதான். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவர் விஜய். அவருக்கும் இது தெரியும். சமூகவலைத்த்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இத்தனை மாதங்களுக்கு பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசியிருப்பதோடு, விஜயிடம் கருணாகரன் திடீரென்று மன்னிப்பு கேட்டது, பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும், அவரது இத்தகைய செயலை வரவேற்று உள்ளார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...