வித்தியாசமான தலைப்புகளோடு, வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இதில் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஆஷிமா நர்வால் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில், ஒரு நகரில் அடுத்தடுத்து கொடூரமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலை வவ்ழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். கொலைகளை செய்வது விஜய் ஆண்டனி தான் என்றும், அவர் ஒரு சைக்கோ கொலைகாரன் என்பதையும் தெரிய வர, அந்த கொலைகளுக்கான பின்னணியும், விஜய் ஆண்டனியின் பின்னணியும் தான் படத்தின் கதை. க்ரைம் திரில்லர் ஜானரான இப்படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படமாக உருவாகியுள்ளது.
வரும் மே மாதம் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடவிருக்கிறார். இதையொட்டி நம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ’கொலைகாரன்’ படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான போட்டியை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் இந்தக் ‘கொலைகாரன்’ படத்தில், படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வளவுதான்.
இதற்கான வழிமுறைகள் இதோ :
இன்று முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரையிலும் தினமும் ஒரு நாளைக்கு ‘கொலைகாரன்’ படத்தின் ஒரு போஸ்டர் என்று மொத்தம் 6 போஸ்டர்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிடப்படும்.
வெளியாகும் ஆறு போஸ்டர்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய துப்புகள் இருக்கும்.
ஆறாவது நாளின் முடிவில் எல்லா போஸ்டர்களிலும் இருக்கும் துப்புக்களை ஒருங்கிணைத்தால், அந்தக் கொலைகாரனின் உண்மைப் பெயரை கண்டறிய முடியும்.
அப்படி அந்தப் பெயரை சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களில் 4 பேருக்கு FASTTRACK கை கடிகாரம் பரிசாக வழங்கப்படும்.
மேலும், சரியான விடையைக் கண்டுபிடிக்கும் 100 ரசிகர்களுக்கு ‘கொலைகாரன்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுக்கள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
போட்டிக்கான பதில்களை kgcontest@gmail.com என்ற இணைய முகவரிக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள்ளாக அனுப்ப வேண்டும்.
பரிசு பெறுபவர்களின் விபரம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்படும்.
ஒரு போட்டியாளருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.
நீங்கள் எழுதியனுப்ப வேண்டியது :
கொலைகாரனின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் உங்களது பெயர், வயது மற்றும் கைப்பேசி எண்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...