சினிமாவில் ஹீரோக்கள் மட்டும் இன்றி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களும் கோடி கணக்கில் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். தற்போதைய தமிழ் சினிமாவில் சாதாரண காமெடி நடிகர்கள் கூட ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள்.
ஆனால், சீரியல்களில் நடிப்பவர்களின் வாழ்க்கை இதற்கு எதிர்மறையாக இருப்பதாக கூறப்படுகிறது. சீரியல் நடிகர்களுக்கு மிகவும் குறைந்த தொலையே சம்பளமாக வழங்கப்படுவதோடு, சினிமாவில் நடிகர்களுக்கு கிடைப்பது போன்ற சலுகைகளும் கிடைப்பதில்லையாம்.
இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ, 150 ரூபாயுடன் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பதற்கு ஸ்ரீ சாதாரணமானவர் அல்ல, அவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் ஒருவரின் வாரிசு ஆவார்.
ஆம், பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் தான் ஸ்ரீ. ஆரம்பத்தில் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீ, தற்போது முழுக்க முழுக்க சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஸ்ரீ தனித்து வருகிறார்.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்ரீக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.16 ஆயிரமாம். ஆனால், அவர் நடிக்க வந்த புதிதில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்தாராம். தற்போது அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...