முன்னணி ஹீரோக்களின் படங்களாகட்டும், புதுமுகங்களின் படங்களாகட்டும், சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் என்று எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாகவே திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு வரும் பைரஸி மாபியாவாக விளங்குகிறது தமிழ் ராக்கர்ஸ். இவர்களை பிடிக்கவும், இவர்களிடம் இருந்து தமிழ் சினிமாவை காக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இவர்கள் பணி தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்த நிலையில், நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை நேற்றே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டு ஹாலிவுட் சினிமாவையே அதிர வைத்துள்ளது.
புதிய தமிழ்ப் படங்களை தான் இப்படி திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வந்தது என்றால், தற்போது ஹாலிவுட் படத்தையே வெளியிட்டிருப்பது பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
பல கோடி செலவில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால், படத்திற்கான புரோமோஷனுக்காக இப்படக்குழுவினர் மிகப்பெரிய தொகையை செலவு செய்து வந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸின் இந்த நடவடிக்கையால், அன்வெஞ்சர்ஸ் படத்தின் வசூல் இந்தியாவில் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...